deepamnews
இலங்கை

முக்கிய சுற்றுலா நகரமாக விளங்கும்  நுவரெலியாவை அபிவிருத்தி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை

இலங்கையில் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு முக்கிய சுற்றுலா நகரமாக விளங்கும் நுவரெலியா மாவட்டத்தின் பங்களிப்பை 04 வருடங்களுக்குள் அதிகரிக்க முறையான திட்டமொன்றின் ஊடாக செயற்படுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நுவரெலியா நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று (10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரைகளை வழங்கினார்.

நுவரெலியா மாவட்ட அரசியல் அதிகார சபை மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கலந்துரையாடலில் நுவரெலியா புதிய நகர அபிவிருத்தித் திட்டம் மற்றும் நுவரெலியா சுற்றுலாத் திட்டம் என்பனவும் வெளியிடப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடியாது என பலர் கருதினாலும் சர்வதேச நாணய நிதியமும் அரசாங்கமும் செய்து கொண்ட உடன்படிக்கையின் மூலம் அனைவருக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய கவர்ச்சிகரமான நகரமாக நுவரெலியா மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Related posts

வடக்கு சுகாதார பணிப்பாளர்  வெளியேறினார் – ஆளுநர் அதிரடி

videodeepam

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

videodeepam

ஒருதலைப்பட்சமாக சபாநாயகர் செயற்படுகிறார்: சஜித் குற்றச்சாட்டு .

videodeepam