deepamnews
இலங்கை

பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல்

பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல் காரணமாக ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பரிவுக்குட்பட்ட பரந்தன் புகையிரத நிலைய பகுதியில் நேற்று மாலை மதுபானம் அருந்திய குழுவினரிடம் அப்பகுதியில் மதுபானம் அருந்த வேண்டாம் என ஊழியர்களால் கூறப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த குண்டர் கும்பல் பரந்தன் ரயில் நிலைய ஊழியர்களை தாக்கி காயப்படுத்தியதுடன், புகையிரத நிலைய உடைமைகளையும்  சேதப்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்ய விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் புகையிரத நிலைய அதிபர் உட்பட இருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

அடிப்படை உரிமைகளை மீறும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்: சட்டத்தரணிகள் சங்கம் மீண்டும் வலியுறுத்தல்

videodeepam

இலங்கையில் அணு மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்கப்போகும் ரஸ்யா

videodeepam

பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது – பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள்!

videodeepam