பாதுகாப்பு நிதி என்பது எப்போதுமே அரசுத்துறையின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான மூன்று நாள் சர்வதேச மாநாட்டை நேற்று புதுடில்லியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் கூட, பாதுகாப்பு நிதி என்பது எப்போதும் அரசின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வருகிறது என்று கூறியுள்ளார்.
பாதுகாப்பு நிதி மற்றும் பொருளாதாரம் தொடர்பான இந்த மூன்று நாள் மாநாட்டில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், அவுஸ்திரேலியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் கென்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
பாதுகாப்பு என்பது அகப் பாதுகாப்பு மற்றும் வெளிப் பாதுகாப்பு எனப் பரவலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிப் பாதுகாப்பின் பொறுப்பு முக்கியமாக ஒரு நாட்டினது பாதுகாப்புப் படைகளிடம் உள்ளது என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு நிதி என்பது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் கூட அரசுக் கலையின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது.
இராணுவம் அதன் பராமரிப்பிற்காக வலுவான நிதியை நம்பியிருப்பதைக் அர்த்தசாஸ்திரமும் குறிப்பிடுகிறது.
சந்திரகுப்த மௌரியா மற்றும் அசோகர் காலத்தில், பாரிய இராணுவங்கள் பராமரிக்கப்பட்டன என்றும் இந்திய அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.