மாலைதீவு உயர்ஸ்தானிகர் அலி பைஸ் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமிதா பண்டார தென்னகோன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (12) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றது.
இரு நாடுகளுக்குமான இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாலைதீவு எப்போதுமே இலங்கைக்கு நட்பு நாடு என்றும், எதிர்காலத்தில் இலங்கைக்கு தனது நாட்டின் அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.