ஜப்பானிய உதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மீள ஆரம்பிக்க மிகவும் ஆவலாக உள்ளதாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) தெற்காசியப் பிராந்தியத்தின் சிரேஷ்ட பிரதித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான JICA இன் அர்ப்பணிப்பை பற்றி அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் வாஷிங்டனில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், தனது விஜயத்தின் போது பல முக்கிய இருதரப்பு கலந்துரையாடல்களில் இலங்கை பங்கேற்க முடிந்ததாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இங்கு நடைபெறும் கலந்துரையாடல்கள் இலங்கையின் பொருளாதார மீட்சி செயல்முறை மற்றும் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு உதவும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.