deepamnews
இலங்கை

பலாலி – சென்னை இடையிலான விமான சேவை அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பம்

பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை, அடுத்த வார தொடக்கத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கோவிட் தொற்றை அடுத்து நிறுத்தப்பட்ட விமான சேவையை மூன்று வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் கட்டணம், கொழும்பு மற்றும் சென்னைக்கு இடையிலான விமானக் கட்டணங்களை விட கணிசமாகக் குறைவாக இருக்கும் என விமான சேவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விமான சேவைகளை மீள ஆரம்பிப்பது மற்றும் குறைந்த விமானக் கட்டணங்கள் வடக்கு மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

அதேவேளை, விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Related posts

தொழிற்சங்க ஒன்றியத்தினரை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி – வரி சட்டம் தொடர்பில் கலந்துரையாடல்    

videodeepam

தேர்தலுக்கான செலவை ஈடு செய்வது சவாலானது – திறைசேரி செயலாளர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

videodeepam

சட்டவிரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட ஐவர் தலைமன்னாரில் கைது

videodeepam