deepamnews
இலங்கை

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் – பொலிசார் அடாவடித்தனம், 6 பேர் கைது

கொழும்பு – காலி முகத்திடலில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிசார் அடாவடித்தனமாக நடந்து கொண்டதால், அமைதியற்ற நிலை ஏற்பட்டது.

சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்ட அரகலய ஆர்ப்பாட்டங்களின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில், நேற்று மாலை காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எந்தவொரு அமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும், பதாதைகள் எவற்றையும் காட்சிப்படுத்தியிருக்கவில்லை.

எனினும் அவர்கள் கடந்த மே மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் 9 ஆம் திகதி இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகக் குறிப்பிட்டனர்.

கடந்த ஆர்ப்பாட்டக் காலங்களில் வெவ்வேறு காரணிகளால் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கும் ,மே 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களை நினைவுபடுத்துவதற்காகவுமே தாம் கூடியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதன் போது பெருமளவில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு, அவர்களை அங்கிருந்து கலைப்பதற்கு முயற்சித்த போது, அங்கு அமைதியற்ற நிலை ஏற்பட்டது.

தனது பெண் குழந்தையுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்ணொருவரை பொலிசார்  நடவடிக்கை எடுத்த போது அங்கிருந்தவர்கள் அதற்கு இடமளிக்காமல் அவர்களுடன் முரண்பட்டனர்.

இதனால் பதற்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த 6 பொதுமக்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related posts

சஜித் அணிக்குள் குழப்பம் – கபீர், ஹர்ஷ, எரான் கடும் அதிருப்தி.

videodeepam

அரிசி இறக்குமதியை உடனடியாக நிறுத்த வேண்டும் – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு 

videodeepam

வரவு செலவு திட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நாடு திரும்புகின்றார் பசில்

videodeepam