deepamnews
இலங்கை

இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக மாற்றும் யோசனை

இலங்கையை நடுத்தர வருமானம் பெறும் நாடு என்ற நிலையில் இருந்து குறைந்த வருமானம் பெறும் நாடாக மாற்றுவதற்கான யோசனையை அமைச்சரவை இன்று பரிசீலிக்கவுள்ளது.

உலகின் ஏழ்மையான மற்றும் மிகவும் பாதிக்கப்படக் கூடிய நாடுகளுக்கு உதவும் உலக வங்கியின் ஒரு பிரிவான, சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தின் சலுகை நிதியைப் பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இந்த முடிவிற்கான விரிவான காரணத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற உள்ளதாகவும், அதன் பின்னர் உலக வங்கிக்கு தெரிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாட்டு நாணயக் கையிருப்பு பற்றாக்குறை, பணவீக்கம், கடனை அடைப்பதில் உள்ள சிரமங்கள் உள்ளிட்ட நிதி நெருக்கடிகளை கருத்தில் கொண்டு, அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இலங்கையை நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதற்கு, சில முன்னாள் அதிகாரிகள் புள்ளிவிபரங்களை சிலவற்றை தவறாக கையாண்டனர் என்ற விடயத்தையும் அரசாங்கம் கவனத்தில் எடுத்துள்ளது.

Related posts

இலங்கையின் வறுமை வீதம் இரட்டிப்பாக அதிகரிப்பு – உலக வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை

videodeepam

இல்லாத கூட்டமைப்பிற்கு எவ்வாறு தலைவராக இருக்க முடியும் – இரா.சம்பந்தனிடம் கே.வி. தவிராசா கேள்வி

videodeepam

மேதின பேரணிகள் மற்றும் கூட்டங்களை நடத்த தயராகும் கட்சிகள்

videodeepam