மேலும் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சுங்கத்துறையின் எதிர்பார்க்கப்படும் வருமான இலக்குகளை அடைவதற்கும் இது உதவும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுங்கத்தின் வருட இலக்குகள் தொடர்பான மீளாய்வு கூட்டத்தின் பின்னர் அமைச்சர் இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டார்.
முதல் 03 மாதங்களுக்கு சுங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள வருமான இலக்கு 270 பில்லியன் ரூபாவாகும்.
ஆனால் அக்காலப்பகுதியில் பெறப்பட்ட வருமானம் எதிர்பார்த்த வருமானத்தை விட 12% குறைவாக இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.