deepamnews
இலங்கை

மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்திய உயர்ஸ்தானிகர் திடீர் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்தார்.

இதன்போது, இந்திய உயர்ஸ்தானிகர் முன்னாள் ஜனாதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

குறித்த சந்திப்பின் போது, இலங்கையுடனான கடன் மறுசீரமைப்புக்கு இந்தியாவின் ஆதரவு உள்ளிட்ட பரஸ்பர நலன்கள் குறித்து விவாதித்தனர்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிவரும் ஆதரவுக்கு இந்தியா துணைநிற்பதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உறுதியளித்துள்ளார்.

மேலும், இலங்கையில் இந்திய முதலீடுகள் குறித்தும் இருவரும் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது.

நட்பு ரீதியிலும் சுமுகமான சூழ்நிலையிலும் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை இருதரப்பும் மீண்டும் உறுதிப்படுத்தியது.

Related posts

உற்பத்தி திறனற்ற 17 அரச நிறுவனங்களை மூட யோசனை முன்வைப்பு

videodeepam

யாழில் பல இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மீன் சந்தையை திறப்பதில் சுகாதாரத் தரப்பினர் அசமந்தம்

videodeepam

திருகோணமலை மாவட்டத்தில் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்!

videodeepam