deepamnews
இலங்கை

உற்பத்தி திறனற்ற 17 அரச நிறுவனங்களை மூட யோசனை முன்வைப்பு

நாட்டில் இயங்கி வரும் 2200 அரச நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் உற்பத்தி திறன் இல்லாத, பெயரளவிலான நிறுவனங்களாக விளங்குவதால் அவற்றை மூடுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஸ்திரப்படுத்தல் தேசிய  உப குழுவில் தெரியவந்துள்ளது.

மேலும் 52 அரச நிறுவனங்கள் மூலோபாய ரீதியாக பலப்படுத்தப்பட வேண்டும் என  உப குழுவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பணத்தை அதிகமாக அச்சிட்டமையினால், பணவீக்கம் ஏற்பட்டமையை அனைவரும் அறிவார்கள். இதனால் வட்டி விகிதங்கள் அதிகரித்தன. திறைசேரி பற்றுச்சீட்டுகளுக்கு 33 தொடக்கம் 37 வீதம் வரை செலுத்தப்படுகிறது. இதனால் இன்று வர்த்தகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  வியாபாரிகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். சுற்றுலா, புனர்நிர்மாணம், மின்சக்தி மற்றும் எரிசக்தி ஆகிய மூன்று துறைகளும் அண்ணளவாக 2 ட்ரில்லியன் பெறுமதியான கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது என பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.

Related posts

மார்ச் 9 முதல் தொடர் போராட்டம் – தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானம்

videodeepam

இன்றைய வானிலை முன்னறிவிப்பு.

videodeepam

இந்தியா துரிதமாக செயற்பட்டிருக்காவிட்டால் இலங்கை மோசமான  விளைவுகளை சந்தித்திருக்கும் என்கிறார் மிலிந்த

videodeepam