deepamnews
இலங்கை

யாழ்ப்பாணம், அல்வாய் வடக்கில் வாள்வெட்டு தாக்குதலில் ஐவர் காயம்

யாழ்ப்பாணம் – அல்வாய் வடக்கு, மகாத்மா வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் காயமடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம்  நள்ளிரவு அல்வாய் வடக்கு மகாத்மா வீதியில் மோதல்  இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயங்களுக்கு உள்ளான மூவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் இருவர்  யாழ். போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோதலின் போது 15 மாத குழந்தை  ஒன்றும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, காயமடைந்தவர்களை ஏற்றிச்செல்வதற்காக வருகை தந்த அம்பியூலன்ஸிற்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

சம்வம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய, 4 சந்தேகநபர்களை தேடி வருவதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கும் ஆதரவு பாராட்டத்தக்கது என்கிறார் ஷெஹான் சேமசிங்க

videodeepam

அவுஸ்ரேலியாவுக்கு ஆள் கடத்தும் பிள்ளையான் – விசாரணை குழுவை நியமிக்குமாறு சாணக்கியன் கோரிக்கை

videodeepam

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் கைது! – டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியல்

videodeepam