deepamnews
இலங்கை

குழந்தைகள் தாய்மாருக்கு வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல அனுமதி இல்லை – சுற்றுநிருபம் வெளியீடு

தொழிலுக்காக வெளிநாடு செல்லும் பெண்களினதும் அவர்களின் பிள்ளைகளினதும் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு புதிய சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இந்த சுற்றுநிருபத்தை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, இரண்டு வயதிற்கு குறைவான பிள்ளைகளை உடைய தாய்மாருக்கு வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது.

அத்துடன், தொழிலுக்காக வெளிநாடு செல்லும் 45 வயதிற்குட்பட்ட அனைத்து பெண்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிய சுற்றுநிருபத்திற்கமைய, 18 வயதிற்கு குறைவான திருமணமாகாத பிள்ளைகளை உடைய தாய்மார், தமது பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான மாற்று வேலைத்திட்டமொன்றை, தமது பிரதேச செயலாளர் அலுவலகத்தில் முன்வைக்க வேண்டும்.

வெளிநாட்டில் தொழில்புரிந்த நிலையில், உள்நுழைவு விசாவுடன் நாட்டிற்கு வரும் போது, 6 மாதத்திற்குள் மீண்டும் வெளிநாடு செல்வதானால், குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான அறிக்கையை முன்வைக்கத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொதுஜன பெரமுனவுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சி

videodeepam

அரசாங்கம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் – நாலக கொடஹேவா உறுதி

videodeepam

950 கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

videodeepam