deepamnews
இலங்கை

அரசாங்கம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் – நாலக கொடஹேவா உறுதி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் நிலைப்பாட்டில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இல்லை. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ஆகவே தேர்தல் குறித்த அச்சம் கொள்ள வேண்டாம் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி குறிப்பிட்ட விடயத்தை ஊடகங்கள் வாயிலாக அறிந்துக் கொண்டோம், ஆணைக்குழுவுக்கு எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கான சாத்தியமான காரணிகள் ஏதும் தற்போது கிடையாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுதந்திர மக்கள் காங்கிரசின் உறுப்பினர்களுக்கும்,தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எந்த நிலைப்பாட்டின் கீழ் தேர்தல் முறைமையை திருத்தம் செய்யவுள்ளதாக குறிப்பிட்டார் என்பது கேள்விக்குள்ளான நிலையில் உள்ளது. மாகாண சபை தேர்தல் முறைமை திருத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்தே மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது.

தேர்தல் முறைமை தொடர்பில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமாயின் பிரதமர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்துள்ள திருத்த அறிக்கையை தாராளமாக செயற்படுத்தலாம்.

புதிதாக தெரிவு குழு அமைத்து தேர்தல் முறைமையை திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது என முன்னாள் அமைச்சர்களான டலஸ் அழகபெரும,ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் சுட்டிக்காட்டினார்கள்.

நாட்டு மக்கள் தேர்தலை கோரி நிற்கிறார்கள் நாட்டு மக்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்கிறதா என்பது விமர்சிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டும் என்பதையும் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தினோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் நிலைப்பாட்டில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இல்லை.2022ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுக்கமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அதிகாரம் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு கூட கிடையாது.தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் ஆணைக்குழு வசம் உள்ளது.

2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதற்கு உரிய காரணிகள் ஏதும் கிடையாது,ஆகவே தேர்தல் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் குறிப்பிட்டார்கள்.

அத்துடன் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி குறிப்பிட்ட விடயத்தை ஊடகங்கள் வாயிலாகவே அறிந்துக் கொண்டோம்,ஆணைக்குழுவுக்கு எவ்வித உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. உள்ளுராட்சிமன்ற தேர்தலை பிற்போடுவதற்கு சாத்தியமாக காரணிகள் ஏதும் தற்போது கிடையாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

Related posts

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இன்று ரணில் பயணம்

videodeepam

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்  கொரோனா தொற்றால் பலி.

videodeepam

தபால் வாக்குச்சீட்டு விநியோகம் தாமதமாகும் சாத்தியம்  – அரச அச்சகர் அறிவிப்பு

videodeepam