deepamnews
இலங்கை

திடீரென ஜனாதிபதி ரணிலைச் சந்தித்தார் மஹிந்த

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று மாலை அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை 5 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், மஹிந்த ராஜபக்ச நீண்ட நேரம் கலந்துரையாடினார் என்றும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச நேற்று முன்தினம் தொலைபேசி மூலம், தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியிருந்தார்.

இதையடுத்தே, நேற்றுமாலை மஹிந்த ராஜபக்ச அவசரமாக ஜனாதிபதியைச் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

இன்று முழுமையாக முடங்கும் வட, கிழக்கு மாகாணங்கள்- ஹர்த்தாலுக்கு வலுவான ஆதரவு

videodeepam

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உள்ளக நீதி தோல்வி – வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவிப்பு

videodeepam

மகிந்த ராஜபக்சவை போன்று  பதவி ஆசை எனக்கில்லை – வசந்த முதலிகே

videodeepam