deepamnews
இலங்கை

வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை – இலங்கையில் அதிகரிக்கும் மழை

திருகோணமலைக்கு வடகிழக்கே 370 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இன்று மழை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் காற்றின் நிலை மாறும் எனவும் அது இலங்கையை கடக்கும் சாத்தியம் இருப்பதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் தீவின் பல பகுதிகளில் மழை மற்றும் காற்றின் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் அதேவேளை ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, கிழக்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Related posts

விஷ போதைப்பொருள் பாவனையை தடுக்க விசேட செயலணி –  ஜனாதிபதி ரணில் நடவடிக்கை

videodeepam

போலி பத்திரம் – 136 மில்லியன் மோசடி!

videodeepam

தபால் மூலமான வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைப்பு !

videodeepam