deepamnews
இலங்கை

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி விசேட அறிக்கை

தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.

ஐஎம்எப் ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார்.

இலங்கை மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்து மீண்டு வருவதாகவும் அதனை முன்னோக்கி கொண்டு செல்ல முழு ஆதரவையும் எதிர்பார்ப்பதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.

மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த சமூக நியாயமான வர்த்தகப் பொருளாதாரம் மற்றும் பசுமைப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றை உருவாக்குவதற்கு தான் பாடுபட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு வரிகளை குறைத்ததன் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறுகிறார். கோவிட் தொற்றுநோய் போன்ற பிரச்சினைகளால் ரூபாயின் மதிப்பு கடந்த வருடத்தின் மூன்று மாதங்களுக்குள் 40% குறைந்துள்ளது.

இந்த பின்னணியில் தான் ஜனாதிபதி பதவியை ஏற்றேன், இல்லையெனில் இந்த நாடு அழிந்துவிடும் என்றார்.

Related posts

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகிறார் ஜனக ரத்நாயக்க

videodeepam

பரந்தனில் வெடிபொருட்கள் மீட்பில் விசேட அதிரடிப்படையினர்.

videodeepam

இலங்கைக்கு கடத்துவதற்காக  வாகனத்தில் கொண்டு  சென்ற பல லட்சம் ரூபாய் பெறுமதியான   பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது

videodeepam