deepamnews
இலங்கை

இலங்கையில் பாரிய நிலநடுக்கங்கள்: சுரங்கப்பணியகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையில் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம் இல்லை என புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.

எனினும், கடந்த 4 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.

2020-இல் 16 நிலநடுக்கங்களும் 2021-இல் 18 நிலநடுக்கங்களும் 2022-இல் 5 நிலநடுக்கங்களும் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் கடந்த 4 மாதங்களில் 9 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

மக்கள் முன்வைத்துள்ள பிரச்சினைகளுக்கு விஞ்ஞான ரீதியாக விளக்கமளிப்பதற்காக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப்பணியகம், வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், ஏனைய நிறுவனங்கள் இணைந்து இன்று  நடத்திய ஊடக சந்திப்பிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

Related posts

பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் எதிர்க்கட்சியினர் – பிரதமர் மோடி பகிரங்க குற்றச்சாட்டு.

videodeepam

பாடசாலை மாணவியின் மர்ம மரணம் – அதிபர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

videodeepam

தமிழர்கள் மீதான பண்பாட்டு இன அழிப்பின் தொடர்ச்சியே வெட்டுக்குநாறி மலை.

videodeepam