deepamnews
இந்தியா

சிற்றூந்தில் தொங்கியப்படி சென்ற இந்திய பிரதமர் மோடி- காவல்துறையில் முறைப்பாடு  

திறந்த வாகனத்தில் தொங்கியபடி பயணம் செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கேரளாவை சேர்ந்த ஒருவர் காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.  

பிரதமர் மோடி கடந்த 2 நாட்களில் இந்தியாவின்  பல்வேறு மாநிலங்களில் உள்ள 7 நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அவரது இந்த பயணத்தில், மத்திய பிரதேசத்தின் ரேவா நகரில் நடந்த தேசிய பஞ்சாயத்து ராஜ் திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மொத்தம் 17 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை  அர்ப்பணித்து உள்ளார்.

அதன்பின்னர்,  கேரளாவின் கொச்சி நகருக்கு அவர் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் கேரளாவின் பாரம்பரிய முறைப்படி வேட்டி அணிந்து பயணித்தார்.

அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வாகனத்தில் நின்று கொண்டு மக்களை நோக்கி கையசைத்து பயணிக்கும் வழக்கம் இன்றி, இந்த முறை கேரளாவின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்தபடி சாலையில் நடந்தே சென்றார்.

மக்களும் பூக்களை தூவி அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இதுபோன்று 20 நிமிடங்கள் நடந்து சென்ற அவர், அதன்பின் நிகழ்ச்சிக்கு உரிய நேரத்தில் செல்வதற்காக வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.

அப்போது, வாகனத்தின் ஒரு பக்க கதவு திறந்தபடி, அதில் தொங்கியபடி சாலையோரம் நின்றிருந்த மக்களை நோக்கி கையசைத்தபடி சென்றார்.

இதன்பின்பு, கேரளாவில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். கொச்சியில் அவரது இந்த கார் பயணத்திற்கு எதிராக கேரளாவின் திருச்சூரை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவர் முறைபாடு செய்துள்ளார்.

அதில், வாகனத்தின் கண்ணாடி மீது பூக்கள் விழுந்து அதனை மறைத்து விட்டன. இதனால், வாகன ஓட்டுநருக்கு முன்னால் உள்ளவற்றை தெளிவாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஒவ்வொருவரும் சட்டப்படி நடக்க வேண்டும் என சமூகத்தை வலியுறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாடானது கேரள பிரதி காவல்துறை ஆணையாளர் மற்றும் மோட்டார் வாகன துறைக்கும் அனுப்பப்பட்டு உள்ளது. கேரளாவில் பிரதமர் மோடி மேற்கொண்ட முதல் பேரணி அது. இந்த நிலையில், அவருக்கு எதிராக முறைப்பாடு அளிக்கப்பட்டு உள்ளது.

Related posts

இந்திய மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவிப்பு

videodeepam

10 சதவீத இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் நிலைப்பாட்டை காங்கிராஸ் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் தெரிவிப்பி

videodeepam

நளினி உள்பட 6 பேரின் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்

videodeepam