deepamnews
சர்வதேசம்

நோர்வே கடற்பரப்பு மீது 14 மணிநேரம் பறந்த ரஷ்ய குண்டுவீச்சு விமானம் – எழுந்துள்ள அச்சம்

நோர்வே கடற்பரப்பு மீது ரஷ்யாவின் இரண்டு குண்டுவீச்சு விமானங்கள் தங்களது திட்டமிட்ட பயண நிறைவை செய்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் இரண்டு Tu-160 ரக ஏவுகணை கேரியர் குண்டுவீச்சு விமானங்கள் பேரண்ட்ஸ் மற்றும் நோர்வே கடல்களுக்கு மேல் 14 மணி நேரத்திற்கும் மேலான நீடித்த பயணத்தை நிறைவு செய்துள்ளது.

இதனை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

மேலும் Tu-160 ரக விமானத்தின் இந்த நீண்ட தூர இயக்கத்தில் இரவும் பகலுமாக காற்றில் எரிபொருள் நிரப்பப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் டெலிகிராம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பால்டிக் கடல் மீதான சர்வதேச வான்வெளியில் நுழைந்த 3 ரஷ்ய போர் விமானங்கள் தடுத்து நிறுத்தப்பட்டத்தை தொடர்ந்து ரஷ்யாவின் இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக ஜேர்மன் விமானப்படை தங்களது கூற்றை வெளிப்படுத்தியுள்ளனர்.

Tu-160 ரக விமானம், உலகின் அதிவேக போர் ஜெட் விமானமான MiG-31 ஆல் வழிநடத்தி செல்லப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

இந்த Tu-160 ரக ஏவுகணை குண்டுவீச்சு விமானம், தொலைதூர இடங்களில் உள்ள இலக்குகளை அழிக்க உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவை உலகின் அதிக எடை கொண்ட போர் விமானம் என்றும், மிகப்பெரிய சூப்பர்சோனிக் விமானம் என்றும் கருதப்படுகிறது.

Related posts

லிபியா அருகே அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து – ஐரோப்பிய நாடுகளை நோக்கி பயணித்த 73 பேர் உயிரிழப்பு

videodeepam

ஈரானில் அரசாங்க தொலைக்காட்சியை முடக்கிய போராட்டக்காரர்கள்

videodeepam

உக்ரைனுக்கு கிடைத்துள்ள புதிய அமெரிக்க உதவி – ஜெலென்ஸ்கி அறிவிப்பு

videodeepam