ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வரும் நிலையில், அரசாங்க தொலைக்காட்சி சில நிமிடங்கள் முடக்கப்பட்டது.
22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் காவல்துறையினர் தாக்கி உயிரிழந்ததை அடுத்து, ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில், போராட்டத்தை ஆதரித்து வரும் டிஜிட்டல் போராட்டக்காரர்கள், ஈரான் அரசின் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பை சில நிமிடங்கள் முடக்கினர்.
ஈரான் மதத்தலைவர் அயத்துல்லா அலி கமெனி கலந்து கொண்ட கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட போது, சில நிமிடங்கள் முடக்கப்பட்டது.
அப்போது, உயிரிழந்த அமினியின் படமும், போராட்டத்தில் உயிரிழந்த 3 பெண்களின் படங்களும் சில நிமிடங்கள் திரையில் காட்டப்பட்டன.
தொடர்ந்து எங்களது இளைஞர்களின் ரத்தம் உங்களின் கைகளில் உள்ளது. எங்களுடன் சேர்ந்து போராட வாருங்கள். அயதுல்லா காமெனெய், ஈரானை காலி செய்துவிட்டு வேறு நாட்டிற்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது போன்ற வாசகங்களும் காட்டப்பட்டன.