அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கழகத்தின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயர் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், அமைப்புச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்ரேயன் கட்சியின் அடிப்படை பொறுப்புகளிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார். ” என்று கூறியுள்ளார்.