இந்தியக் கடற்படையின், மிக் 29 கே போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறினால் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கோவா கடற்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போதே, விமானம் விபத்துக்குள்ளானது.
விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை அடுத்து, விமானி அதிலிருந்து குதித்து உயிர் தப்பினார்.
கடலில் விழுந்த அவர், பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து இந்திய கடற்படை விசாரணைகளை நடத்தி வருகிறது.