deepamnews
இலங்கை

ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் மாத வருமானம் பெறுவோரும் வரி செலுத்த வேண்டும்

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் மாதாந்தம் குறைந்தபட்சம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுவோர்,  வருமான வரியைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் மாதாந்தம் குறைந்தபட்சம் ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட வருமானம் பெறும் அனைவரும் வருமான வரியைச் செலுத்த வேண்டிய நிலையேற்படும்.

முன்னர் மாதம்  இரண்டரை இலட்சம்  ரூபாவை வருமானமாகப் பெறுவோரிலிருந்து வருமான வரி அறவீடு ஆரம்பமானது.

ஏற்கனவே நடைமுறையிலுள்ள வருமான வரி அறவீட்டு முறைமையுடன் ஒப்பிடுகையில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் உயர்வருமானம் பெறுவோர் மத்தியில் மாத்திரமன்றி வைத்தியர்கள், சட்டத்தரணிகள், சுயதொழில் முயற்சியாளர்கள், வணிகர்கள் நடுத்தர வருமானம் பெறுவோர் உள்ளடங்கலாக நாட்டின் பெரும்பாலான தரப்பினர் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளியல் நிபுணர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

தற்போது பணவீக்க அதிகரிப்பின் விளைவாக மக்களின் நாளாந்த வாழ்க்கைச்செலவு வெகுவாக உயர்வடைந்துள்ள நிலையில், வருமான வரி அறவிடத்தகுந்த குறைந்தபட்ச வருடாந்த வருமானத்தை 3 மில்லியன் ரூபாவை விட அதிகரிக்க வேண்டுமே தவிர, அதனை 1.2 மில்லியன் ரூபாவாகக் குறைக்கக்கூடாது என்ற வாதம் முன்வைக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய இலங்கை உள்நாட்டு இறைவரித்திணைக்கள அதிகாரியொருவர், இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாகவே இவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Related posts

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவு

videodeepam

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு? தமிழரசு கட்சியின் நிலைப்பாடு! சிறிதரன்தெரிவிப்பு.

videodeepam

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் இலங்கைக்கு விஜயம்

videodeepam