ஒபெக் எனும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் குழு, மசகு எண்ணெய் உற்பத்தியை குறைத்துள்ளதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
விலையை கட்டுப்படுத்த ஒபெக் எனும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் மசகு எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 20 லட்சம் பீப்பாய்கள் குறைத்துள்ளன.
இதையடுத்து, 75 டொலராக இருந்த ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் தற்போது 90 டொலரை நெருங்கியுள்ளது.
இதனால் ஒபெக்கின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான சவுதி மீது அமெரிக்கா கோபமடைந்துள்ளது.
இது தொடர்பாக சிஎன்என்னுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அளித்த பேட்டியில் “ரஷ்யாவுடன் இணைந்து கொண்டு அவர்கள் செய்த சில காரியங்களுக்கான விளைவுகளை சந்திக்கப் போகிறார்கள்.
சவுதி அரேபியாவுடனான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது என்று நான் நம்புகிறேன்.” என எச்சரித்துள்ளார்.