பெரும்பாலான அரசியல் கட்சிகள் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கும் பேரணியாக செல்வதற்கும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய பொதுஜன பெரமுன இந்த வருடத்திற்கான தொழிலாளர் தின நிகழ்வை பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் முன்னெடுக்கவுள்ளது.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தலைமையில் பிற்பகல் 02 மணியளவில் தொழிலாளர் தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொது செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தொழிலாளர் தினக் கூட்டம் அக்கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் பி ஈ குணசிங்க மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியின் தொழிலாளர் தின நிகழ்வு அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் பீ ஆர் சி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொழிலாளர் தினக்கூட்டம் கண்டி பொதுச் சந்தைக்கு முன்னால் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.