deepamnews
இலங்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும் – சம்பந்தன்  தெரிவிப்பு

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் சில முடிவுகளை அரசுக்கு அறிவிக்கும்.”  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசால் ஆரம்பிக்கப்பட்ட சர்வகட்சிப் பேச்சு இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளமை தொடர்பிலும், தீர்வு முயற்சிகள் மந்த கதியில் உள்ளமை குறித்தும் இரா. சம்பந்தனிடம் எழுப்பிய கேள்விக்கே மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் :-

“தற்போதைய நிலைமையில் அரசின் செயற்பாடுகள் மந்த கதியில் மட்டுமல்ல துப்பரவாக எதுவுமே நடைபெறவில்லை. வாக்குறுதிகள் மாத்திரமே அரசால் வழங்கப்படுகின்றன.

ஆனால், நடைமுறையில் எதுவும் இல்லை. அதுதான் உண்மை. இந்த விடயம் சம்பந்தமாக நாம் என்ன செய்ய வேண்டியது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். விரைவில் சில முடிவுகளை அறிவிப்போம்.” – என்றார்.  

Related posts

பலநூறு கிலோமீட்டர்களை தாண்டி வந்து குருந்தூர் மலை பொங்கலை நிறுத்த முயற்சி!

videodeepam

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு – ஜப்பானிய பிரதிநிதிகள் உறுதி

videodeepam

யாழில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வெள்ளி, ஞாயிறு விடுமுறை!

videodeepam