அரசியல் வேறுபாடின்றி மக்கள் நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களின் தொழில்சார் முன்னேற்றங்களுக்காக ஆயிரத்து 650 மில்லியன் ரூபா வழங்குவதற்கு ஜப்பான் முன்வந்திருப்பதாகவும், அதேபோன்று வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களுக்கான வீடமைப்பு மற்றும் வாழ்வாதார உதவிகளுக்காக சீனா 1500 மில்லியன் ரூபாவை வழங்க முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவும் பல்வேறு ஒத்துழைப்புக்களை வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
எமது மக்களுக்கு கிடைக்கின்ற இவ்வாறான வாய்ப்புக்களை பகிர்ந்தளிப்பதில் அரசியல் பாகுபாடு எதுவும் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.