deepamnews
இலங்கை

தையிட்டியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!

ஜனநாயக ரீதியில் போராடிய அப்பாவிகள் ஒரு சிலரை கைது செய்து பலாலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக சட்டத்தரணி சுகாஷ் கனகரத்தினம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அவர்களை விடுவிப்பதற்கான மற்றும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுக் கொண்டு  இருக்கின்றோம். பொலிஸ் பொறுப்பதிகாரியை நாங்கள் சந்திக்க வந்த வேளை எங்களை காக்க வைத்துவிட்டு திருப்பி அனுப்பியுள்ளார்கள்.

பொலிசாருடைய அராஜகமும் அடக்குமுறையும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஆனால் இவற்றுக்கு நாங்கள் பணியப்போவதில்லை. ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம்.

பலாலியில் இராணுவ பாதுகாப்புக்குள், இராணுவ முகாம்களை தாண்டி பொலிஸ் நிலையத்தை அமைத்திருக்கின்றார்கள்.

இந்த பொலிஸ் நிலையத்திற்கு வருவதற்கு கூட நாங்கள் இராணுவத்தினூடாகவே வரவேண்டி இருக்கின்றது. இதுவும் இலங்கையில் இராணுவ ஆட்சி நடைபெறுகின்றது என்பதை வெளிப்படுத்தும் முகமாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

எந்தவிதமான ஜனநாயகத்திற்கு எதிரான விடயத்திற்கும், பொலிசார் மற்றும் இராணுவத்தினரால் பொதுமக்களது வாழ்வாதாரங்களை அழைக்கின்ற செயற்பாடுகளுக்கு எதிராகவும் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

6 பேருக்கு எதிராக எதிர்காலத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – கடிதம் அனுப்பினார் மைத்திரி

videodeepam

போர்க்காலத்தில் உயிரிழந்தவர்களுக்காகப் பொதுத்தூபி – மஹிந்த ஆதரவு

videodeepam

வடக்கு – கிழக்கில் ஹர்த்தாலை முன்னெடுக்க 6 கட்சிகள் கூட்டாக அழைப்பு

videodeepam