deepamnews
இலங்கை

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில அக்கறையாக உள்ளேன் – லண்டனில் ஜனாதிபதி தெரிவிப்பு

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில்  தாம் அக்கறையாக உள்ளதாக லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் புத்திஜீவிகளுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மன்னருடைய முடி சூட்டு விழாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வுக்கு நேற்று முன்தினம் வியாழக்கிழமை தமிழ் புத்திஜீவிகள் இரவு விருந்து வழங்கினர்.

இதன்போது  தமிழ் புத்திஜீவிகள் மத்தியில் கருத்தைப் பகிர்ந்து கொண்ட போது தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு விடையத்தில் நாம் கரிசணையாகச் செயல்படுகிறோம்.

அரசியல் தீர்வு விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு  தமிழ் கட்சிகளும் அரசாங்கத்தோடு இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்க முன்வருகிறார் என நினைக்கிறேன்.

 தமிழ் காட்சிகளுடனான சந்திப்பு எதிர்வரும் வாரங்களில் இடம்பெற உள்ள நிலையில்  ஒரு தகவல் உரையாடலில் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் விரிவாக கலந்துரையாட உள்ளதாக புத்திஜீவிகள் மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Related posts

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் விடுத்துள்ள எச்சரிக்கை

videodeepam

அலுவலக மலசலகூடத்தில் சடலம் மீட்ப்பு.

videodeepam

இலங்கையில் 62 இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவை – UNICEF நிறுவனம் அறிக்கை

videodeepam