பிரித்தானியாவில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி அதிக ஆசனங்களை வென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவின் ஆளும் பழைமைவாத கட்சி, இந்த தேர்தலில் பாரிய தோல்வி அடைந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானியா உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பு கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றது.
இந்தநிலையில், பிரித்தானிய பிரதமராக ரிஷி சுனக் கடந்த வருடம் பதவியேற்ற பின்னர் அவரின் கட்சி எதிர்கொண்ட முக்கிய தேர்தல் இதுவாக கருதப்படுகின்றது.
வெள்ளிக்கிழமை முதல் வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான ஆளும் பழைமைவாதக் கட்சி 40க்கும் அதிகமான உள்ளூராட்சி சபைகளின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இது ரிஷி சுனக் தலைமையிலான கட்சியின் பாரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
இதேவேளை, பிரித்தானியாவின் வட அயர்லாந்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளது.