deepamnews
இந்தியா

தமிழகத்தை சேர்ந்த பி.எப்.ஐ முன்னாள் நிர்வாகிகள் 5 பேர் கைது!

இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள, பி.எப்.ஐ எனப்படும் பொப்யூலர் ப்ரொண்ட் ஒப் இந்தியா அமைப்பின், தமிழகத்தை சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் 5 பேரை, இந்திய தேசிய புலனாய்வு பிரிவான என்.ஐ.ஏ கைது செய்துள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று  (09) பல்வேறு இடங்களில், இந்திய தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்ட போது, குறித்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களில் நேற்று  சோதனைகள் நடத்தப்பட்டன.

இதன்போது டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் சட்டவிரோத ஆவணங்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தடைசெய்யப்பட்டுள்ள பி.எப்.ஐ எனப்படும் பொப்யூலர் ப்ரொண்ட் ஒப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 10 பேருக்கு எதிராக ஏற்கனவே என்.ஐ.ஏ அதிகாரிகள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையிலேயே தற்போது மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

சாதிவாரி கணக்கெடுப்பை பா.ஜ.க. எதிர்க்கவில்லை! – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவிப்பு.

videodeepam

இந்திய தலைநகரம் முடங்கும் வகையில் நடைபெற்ற உழைக்கும் மக்கள் பேரணி!

videodeepam

சென்னை விழா ஏப்ரல் 29 முதல் மே 14 வரை – 1.50 கோடி ரூபாய் செலவில் ஏற்பாடு

videodeepam