கொக்குவில் இந்துக் கல்லூரியின் அதிபர் மீது சுமத்தப்பட்டு நிதி மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் யாழ் வலையக் கல்விப் பணிமனை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பாடசாலை நலம் விரும்பிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
தற்போதைய பாடசாலை அதிபர் பாடசாலை பயன்படுத்தி பல்வேறு நிதி முறைகேடுகள் இடம்பெற்ற மை ஆதாரங்களுடன் வெளிவந்த நிலையில் சில முறைகேடுகளுக்கு யாழ். வலயகக் கல்வி அலுவலகம் உடந்தையாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள் அனுமதியின் போது எவ்விதமான நிதியும் பெறக்கூடாது என்பது கல்வி அமைச்சின் சுற்று நிருபமாக உள்ள நிலையில் நன்கொடை என்ற பெயரில் பல இலட்சம் ரூபாக்கள் பெறப்பட்ட மை வெளி வந்துள்ளது.
பாடசாலையின் அபிவிருத்திக்கு பாடசாலை அபிவிருத்தி சங்கத்திலிருந்து நிதி பெறப்படும் போது குறிப்பிடப்பட்ட அளவு நிதிக்கு மேல் செலவு செய்யப்படுமானால் வலயக் கல்வி அலுவலகம் மற்றும் மாகாண கல்வித் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட வேண்டும் என கூறப்பட்டாலும் பல இலட்சம் ரூபாய் வேலைத்திட்டங்களுக்கு அனுமதி பெறப்படாமலே இடம் பெற்றுள்ளது.
குறித்த பாடசாலை அதிபரின் மோசடி தொடர்பில் ஏற்கனவே மாகாண கல்வி அமைச்சுக்கு பல தடவைகள் முறைப்பாடுகள் முன்வைத்தும் குறித்த பாடசாலை ஆதிபர் வடமாகாண முன்னாள் அமைச்சு ஒன்றின் செயலாளராக இருந்தவரின் நெருங்கிய உறவினராகக் காணப்படுவதால் நடவடிக்கை எடுப்பவர்களுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகிறது.
குறித்த பாடசாலையில் இடம்பெற்ற பல மில்லியன் ரூபாய் மோசடிக்கு பழைய மாணவர் சங்க மும் காரணமாக அமைவதோடு வடக்கு கல்வி உயர் அதிகாரிகளும் குறித்த மோசடிகளுக்கு உடந்தையாக உள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதுமட்டுமல்லாது வழங்கப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்திற்கு பாடசாலை அபிவிருத்தி சங்கத்திற்கு 20 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என தகவல் வழங்கிவிட்டு வெளியிடப்பட்ட கணக்கறிக்கையில் 4 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் தலைவராக இருந்த ஒருவர் கம்பெரலிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 20 இலட்சம் ரூபாய் நிதியில் பாடசாலை அதிபருடன் இணைந்து பல்வேறு முறைகேடுகளுடன் தொடர்பட்டதாக குற்றச்சாட்டுகளும் உள்ளது.
குறித்த பாடசாலையில் இடம்பெறும் மோசடிகளுடன் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகளும் தொடர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வடமாகாண கல்வி அமைச்சுக்கு குறித்த பாடசாலையில் இடம் பெற்ற முறை கேடுகள் தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் மூவர் அடங்கிய விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது.