மே 09 சம்பவத்தை அரசாங்கம் குறிப்பாக பொதுஜன பெரமுன கேட்டு வாங்கிக் கொண்டதாகவும் நாட்டு மக்களை விமர்சிக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் மீண்டும் மே 09 சம்பவத்தை தோற்றுவிக்க வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே நளின் பண்டார இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சண்டித்தனமாக செயற்பட்டால் நாட்டுக்கு எவ்வாறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகை தருவார்கள். இராஜாங்க அமைச்சரை பதவி நீக்கி முறையான விசாரணைகளை ஜனாதிபதி முன்னெடுக்க வேண்டும்.
மே 09 தினத்தன்று இவர்கள் இவ்வாறு சண்டித்தனமாக செயற்பட்டார்கள்.மே 09 தினத்தன்று அரசாங்கம் குறிப்பாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கேட்டு வாங்கிக் கொண்டது.
இவ்விடயத்தில் நாட்டு மக்களை விமர்சிக்க வேண்டாம். அதிகாரத்தில் இருந்துக் கொண்டு மீண்டும் மே 09 சம்பவத்தை தோற்றுவிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.