deepamnews
இலங்கை

பிளாஸ்டிக் பொம்மை பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை

பிளாஸ்டிக் பொம்மைகள் சிறு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துவதால், பிளாஸ்டிக் பொம்மைகளின் உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்துவதில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை கவனம் செலுத்தியுள்ளது.

பிளாஸ்டிக் பொம்மைகள் உற்பத்தி மற்றும் விற்பனையை மட்டுப்படுத்துவது தொடர்பாக அந்த அதிகாரசபையில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பொம்மைகளில் பிளாஸ்டிக்குக்கு மேலதிகமாக கன உலோகங்கள் அடங்கிய பல்வேறு வர்ணங்கள் காணப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் சரோஜனி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பிளாஸ்டிக் உட்கொள்வதால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதால் மரத்தினால் செய்யப்பட்ட பொம்மைகளை குழந்தைகளுக்கு கொடுப்பதில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.

Related posts

இலங்கைக்கு தொடர்ந்தும் உதவுவதாக அமெரிக்கா உறுதி –  அன்டனி பிளிங்கனை சந்தித்தார்  அலி சப்ரி

videodeepam

இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக மாற்றும் யோசனை

videodeepam

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வரவுள்ளார்,

videodeepam