பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் பொலிஸ் மா அதிபர் திரு.சந்திர பெர்னாண்டோ தலைமையில் பொலிஸ் ஆணைக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய சமர்ப்பித்த கோரிக்கை பரிசீலிக்கப்பட உள்ளது.
தமக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் நியாயமற்றது என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பான முறைப்பாட்டினை இன்று பொலிஸ் ஆணைக்குழு பரிசீலித்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் திரு.சந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.