deepamnews
இலங்கை

சர்வதேச  “பேசு தமிழா பேசு” பேச்சு போட்டியில் யாழ் இளைஞன் முதலிடம்

சர்வதேச அளவிலான “பேசு தமிழா பேசு” பேச்சு போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மோகன்ராஜ் ஹரிகரன் முதலிடத்தைப் பெற்று சாதித்துள்ளார்.

வணக்கம் மலேசியா’ தொலைக்காட்சியின் ஏற்பாட்டில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் அனுசரணையில் நடைபெற்ற அனைத்துலக ‘பேசு தமிழா பேசு போட்டியில் 12 நாடு களை சேர்ந்த 48 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பபீடத்தை சேர்ந்த நான்காம் ஆண்டு மாணவன் மோகன்ராஜ் ஹரிகரன் பங்கேற்றிருந்தார்.

ஆறாவது தொடராக – நடைபெற்ற இந்தப் பேச்சுப் போட்டி நிகழ்நிலை வாயிலாக நடைபெற்றது.

இதன் இறுதிப் போட்டி கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி நடைபெற்றது. இதில், மோகனராஜ் ஹரிகரன் முதலாம் இடத்தைப் பெற்று சர்வதேச பேசு தமிழா பேசு போட்டியின் வெற்றிக் கிண்ணத்தை தன் வசமாக்கியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

திருகோணமலையில் கிணற்றில் வீழ்ந்து 15 வயது மாணவன் பலி

videodeepam

அடுத்த வருட இறுதியில் பணவீக்கம் 5 சதவீதமாக குறையும் – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு

videodeepam

முதியோர், நோயாளருக்கான ஜூலை மாத கொடுப்பனவு நாளை வழங்கப்படும்! – ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு

videodeepam