இந்தியா- தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக தயார்படுத்தப்பட்டிருந்த 2090 கிலோ கஞ்சாவுடன் 6 பேர் தூத்துக்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் இருந்து தொடர்ச்சியாக கும்பல் ஒன்று திட்டமிட்டு தமிழகம், கேரளா மற்றும் தூத்துக்குடிக்கு கஞ்சாவை விற்பனை செய்துவருகின்றதாக தூத்துக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் 4 கோடி ரூபா மதிப்பிலான 2090 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து, தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் விற்பனை செய்து வருவதாகவும், மேலும் இந்த கஞ்சாவினை இலங்கைக்கு கடத்த இருந்ததாக தெரியவந்ததுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின்போது சந்தேகநபர்கள் 6 பேரை தூத்துக்குடியில் கைது செய்துள்ளதுடன் 2090 கிலோ கஞ்சா, 25 ஆயிரம ரூபா பணம், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், மற்றும் 8 கையடக்க தொலைபேசிகளை மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளமையும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.