deepamnews
இலங்கை

கம்பளை யுவதியின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

கம்பளை – எல்பிடிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், கைதான சந்தேகநபர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் கம்பளை பதில் நீதிவான் முன்னிலையில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த யுவதி துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக குறித்த 22 வயதான யுவதியின் சடலம் நேற்று முன்தினம் தோண்டி எடுக்கப்பட்டது.

கடந்த 7ஆம் திகதி முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட கம்பளை பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியை கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான 24 வயதுடைய சந்தேநபர், குறித்த யுவதியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதேவேளை, 22 வயதுடைய குறித்த யுவதியின் இறுதிக் கிரியைகள் கம்பளை – எல்பிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மயானத்தில் நேற்று இடம்பெற்றது.

Related posts

பெற்றோல் வாகன இறக்குமதிக்கு தடை – மின்சார கார்களை மட்டுமே அனுமதி என்கிறார் அமைச்சர் மனுச  

videodeepam

ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட குழு இலங்கைக்கு வருகை தந்துள்ளது.

videodeepam

ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்தால் ஆதரவை வழங்க தயார் – சஜித் பிரேமதாச

videodeepam