deepamnews
இலங்கை

டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் இறக்குமதிகள்  வீழ்ச்சி – தம்மிக்க பெரேரா தெரிவிப்பு

டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் இறக்குமதிகள் கணிசமாக குறைந்துள்ளதாக தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் டொலர் நெருக்கடி தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா, நாட்டிற்குள் டொலர்கள் செல்வதற்கான நிலையான பாதையை  நாடு இன்னும் உருவாக்கவில்லை என தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மித்தெனிய பிரதேசத்தில் நேற்று (14) இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அவர், டொலர் பற்றாக்குறையே இலங்கையில் வரி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

டொலர்கள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் இறக்குமதிகள் கணிசமான அளவு குறைந்துள்ளதாகவும், இது சுங்க வரிகள் மற்றும் வரிச்சலுகைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை நேரடியாகப் பாதிக்கிறது என்றும் அவர் விளக்கினார்.

சுங்கக் கட்டணம் மற்றும் சுங்க வரி மூலம் இழக்கும் பணத்தை ஈட்டுவதற்காகவே ஏனைய வரிகள் அதிகரிக்கப்படுவதாகவும் இதன் பின்னணியில் உள்ள பிரதான பிரச்சினை டொலர் பற்றாக்குறை எனவும் டொலர்களை சம்பாதிப்பதற்கு எமக்கு வேறு வழிகள் இல்லை எனவும் தம்மிக்க பெரேரா மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts

பலம் வாய்ந்த ராஜ்ஜியங்களுக்கு இடையேயான முரண்பாடுகளில் தலையிடும் வாய்ப்பு இல்லை – ஜனாதிபதி தெரிவிப்பு

videodeepam

குற்றச்சாட்டை மறுக்கும் தனுஷ்க குணதிலக்க – நீதிமன்றம் பிணை மறுப்பு

videodeepam

வீதி விபத்துக்களில் பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

videodeepam