பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டை இலங்கை அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டை அவுஸ்திரேலிய காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் 10 முதல் 12 மாதங்கள் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் நீளும் என அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் பிணைக் கோரிக்கையினை அவுஸ்திரேலியா நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தனுஷ்க குணதிலக்க மீது 4 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், நேற்றைய தினம் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக கைவிலங்குடன் சிட்னி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்தநிலையில், அவர் ஒரு வெளிநாட்டுப் பிரஜை என்பதால், அவரது பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவர் தொடர்ந்தும் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, அவர் ஒரு திருத்த மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.