deepamnews
இலங்கை

பிரித்தானிய பிரதமருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக்குக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் உச்சிமாநாட்டில் கலந்துக்கொள்ள ஜனாதிபதி எகிப்து பயணமானார்.

இதன்போதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் ‘COP27’ என அழைக்கப்படும் உச்சி மாநாடு நேற்று  எகிப்தில் ஆரம்பமானது.

இந்த மாநாட்டில் உரையாற்றவுள்ள பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனாக் தூய்மையான அபிவிருத்திக்கான சர்வதேச ரீதியிலான பணியினை தொடர்வதற்கு சகல நாடுகளும் முன்வரவேண்டும் என கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இந்த மாநாடு பிரித்தானிய கிளாஸ்கோவில் முன்னாள் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜொன்சனின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் ‘COP26’ ஆம் உச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட புவி வெப்படைதலுக்கு காரணமான உமிழ்வை மட்டுப்பத்துவதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என ஐக்கிய நாடுகள் சபை அதிர்ப்தியினை வெளியிட்டுள்ளது.

முறையான தொழில்துறை அரம்பிப்பதற்கு முன்னரே புவி 1.1 சென்றிகிரேட்டாக வெப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் இரண்டாயிரத்து 100 ஆம் ஆண்டளவில் புவியின் வெப்பம் 1.5 சென்றிகிரேட்டிற்கு மேல் அதிகரித்தால் பாரிய பின்விளைவுகளை உலகம் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில், தற்போதைய காலநிலைய கொள்கையினை நாடுகள் பின்பற்றினால் புவி வெப்பம் 2.8 சென்றிகிரேட்டாகும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், புவி வெப்ப உமிழ்விற்கு பொறுப்பான பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள நாடுகளிடம் இருந்து வறிய நாடுகள் நிதி இழப்பீடுகளை பெற அழுத்தம் கொடுக்கும் செயல்பாடுகள் அதிகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த உச்சி மாநாட்டில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானிய பிரதமர் ரஷி சுனக், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் உட்பட பல தலைவர்கள் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

திருகோணமலை தாக்குதல் சம்பவத்துக்கு சீமான் கண்டனம்.

videodeepam

தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு எட்டப்பட வேண்டும் – மிலிந்த மொரகொட தெரிவிப்பு.

videodeepam

யாசகர்கள், நடமாடும் வர்த்தகர்களுக்கு தடை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு

videodeepam