அடுத்து வரும் ஆறு மாதங்களில் மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய பல்வேறு பிரிவுகளில் நிவாரணங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எஹெலியகொட பிரதேசத்தில் காளாண் செய்கையின் பல செயற்றிட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கூட்டத்தில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அடுத்த இரண்டு மாதங்களில் மின் கட்டணம் குறைக்கப்படும். அத்துடன் எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் குறைக்கப்படும்.
எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்த மானியம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்துடன் மேலதிக கொடுப்பனவை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.