தமிழ் தரப்புகளுடன் பேச்சுவார்த்தை என்ற பெயரில் கண்துடைப்பு செய்வதாகவும் அதன் மூலம் சர்வதேசத்திடம் நிதியுதவிகளை பெற்று பாதாளத்திற்குள் நாட்டினை ஜனாதிபதி கட்டியெழுப்ப முயல்வதாகவும் அவற்றை தெரிந்தும் சில தமிழ் கட்சிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதாகவும்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்த போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிங்கள மக்களால் முழுவதுமாக துடைத்து எறியப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியிலே ஒரு ஆசனத்தை கூட பெற்றுக்கொள்ள முடியாமல் தேசிய பட்டியலாசனத்தில் கூட தேர்தல் முடிந்த கையுடன் நாடாளுமன்றத்திற்கு வர முடியாது ஓராண்டு கழித்து வந்து ஏனையவர்களை அடக்கி ஒடுக்கி பின்கதவினால் ஜனாதிபதியாக வந்த ஒருவர் ஒருபொழுதும் தமிழ் மக்களிற்கான தீர்வு குறித்து அக்கறை செலுத்த மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே எனவும் தெரிவித்தார்