deepamnews
இலங்கை

வரவு – செலவுத் திட்டம் குறித்து புதிதாக குறிப்பிட எதுவும் கிடையாது என்கிறார் சுமந்திரன்

நாடு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் இந்த வரவு –  செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி தமது திட்டத்தை தெரிவித்துள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று அடுத்த வருடத்துக்கான வரவு –  செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர், அதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த வரவு –  செலவுத்  திட்டத்தில் புதிதாக குறிப்பிடுவதற்கு எதுவும் கிடையாது. கூட்ட வேண்டிய அனைத்தையும் ஏற்கனவே கூட்டியுள்ள நிலையில் தற்போது இந்த வரவு –  செலவுத்  திட்டத்தில் முக்கியமானது  என எதையும் குறிப்பிட முடியாது என எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள தற்போதைய நெருக்கடியை எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்கான ஜனாதிபதியின் திட்டமாக மட்டுமே இது அமைந்துள்ளது. அதனால் நாடு எதிர்கொண்டுள்ள சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் இந்த வரவு –  செலவுத் திட்டத்தின் ஊடாக ஜனாதிபதி தமது திட்டத்தை தெரிவித்துள்ளார் எனவும்  தெரிவித்துள்ளார்.

Related posts

வடக்கு ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்கும் வைபவத்தை புறக்கணித்த தமிழ் எம்பிக்கள்

videodeepam

உலக பூமி தினம் யாழில் அனுஷ்டிப்பு.

videodeepam

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மின்சார கட்டமைப்பு – இரண்டு மாதங்களுக்குள் ஒப்பந்தம்

videodeepam