இந்தியாவின் இராணுவராணுவ ரகசியங்களை வெளிநாடுகளில் உள்ள உளவு அமைப்புகளுக்கு பகிர்ந்ததாக எழுந்த புகாரில் டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷியை சிபிஐ கைது செய்துள்ளது.
டெல்லியை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் விவேக் ரகுவன்ஷி. நாட்டின் பாதுகாப்புத்துறை தொடர்பான செய்திகளை வழங்குவதில் முன்னணியில் இருந்தார். இவர் டி.ஆர்.டி.ஓ.இ மற்றும் ராணுவம் தொடர்பான முக்கிய தகவல்களை சேகரித்து அவற்றை வெளிநாட்டு உளவு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டதாக டெல்லி பொலிஸார் இவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்திருந்தது. பின்னர் மே 9 ஆம் திகதி விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டு வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அண்மையில் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
அவருக்கு எதிரான சோதனைகள் கிடைத்த ஆதாரங்களை சேகரித்த பின்னர் ரகுவன்ஷி இரவு சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். மேலும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள ரகுவன்ஷியின் கூட்டாளிகளைக் கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிபிஐ அறிவித்துள்ளது.