14வது தேசிய போர்வீரர் நினைவு தினம் இன்று பிற்பகல் பத்தரமுல்ல தேசிய போர்வீரர் நினைவுத்தூபிக்கு முன்பாக நடைபெறவுள்ளது. இதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குகிறார்.
பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர், பொது பாதுகாப்பு அமைச்சர், பிரதி அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள், போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் பெற்றோர்கள், ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
30 வருடகால யுத்தத்தின் போது தாய்நாட்டின் ஐக்கியத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்பதற்காக தமது இன்னுயிர்களை தியாகம் செய்த முப்படையினரான சிறிலங்கா பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் வீரவீரர்கள் நினைவு கூரப்படவுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தேசிய போர்வீரர் கொண்டாட்டத்தின் போது பத்தரமுல்ல பாராளுமன்ற வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.