deepamnews
இலங்கை

நாளை (23) முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வகுப்புகளுக்கு தடை

நாளை (23) முதல் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மே 29 முதல் ஜூன் 8 வரை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

இதன்படி, நாளை (23) நள்ளிரவு 12 மணி முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பான கல்வித் தடை விதிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், யூகிக்கும் வினாக்கள் அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல், பரீட்சை வினாத்தாள்களில் வினாக்கள் வழங்கப்படும் என பதாகைகள், கையேடுகள், இலத்திரனியல் அல்லது அச்சிடப்பட்ட ஊடகங்களை வெளியிடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

எந்தவொரு நபரோ அல்லது அமைப்போ இந்த உத்தரவுகளை மீறினால்  அது குறித்து புகார் செய்யலாம் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

அதிகாரத்தை பரவலாக்கினால் மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைத்தூக்கும் – சரத் பொன்சேகா

videodeepam

இலங்கையை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்

videodeepam

இலங்கையில் புதிய வகை நுளம்பு கண்டுபிடிப்பு

videodeepam