deepamnews
இலங்கை

கஜேந்திரகுமார் எம்.பி தாக்கப்பட்டமைக்கு சிறீதரன் எம்.பி கண்டனம்

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், நேற்றையதினம் (02) மருதங்கேணிப் பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை இந்த நாட்டின் அதியுச்ச அடக்குமுறையையே சுட்டிக்காட்டுகிறது. இதற்கு வன்மையான கண்டனங்களையும் தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டின் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் மீது ஆயுதமுனையில் மேற்கொள்ளப்பட்டுள்ள இவ் அச்சுறுத்தலானது, சாதாரண தமிழ் மக்களின் இயல்பு வாழ்வில் இராணுவம் மற்றும் அரச புலனாய்வாளர்களால் எத்தகைய அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்பதை மிகத்தெளிவாகக் காட்டியிருக்கிறது.

மக்கள் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குரிய சிறப்புரிமையை மீறி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இக் கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துவதோடு, இச்சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்- என்கிறார்.

Related posts

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராகிறார் மஞ்சுள பெர்னாண்டோ – அரசியலமைப்பு பேரவை அனுமதி.

videodeepam

ரணில் விக்கிரமசிங்கவிற்கும், மோடிக்கும் இடையில் சந்திப்பு

videodeepam

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பினால் வங்கிகளுக்கு பாதிப்பு ஏற்படாது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு.

videodeepam