அண்மைக்காலமாக கோழி இறைச்சி மற்றும் மீனின் விலைகள் அதிகரித்துள்ளமை தற்காலிகமானதே என என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கோழி இறைச்சி, மீன் மற்றும் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் ஓரிரு வாரங்களுக்கு இதே விலை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், விலைகளை தன்னிச்சையாக அதிகரிக்க முடியாது எனவும், தவறிழைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
இதற்கிடையில், அடுத்த இரண்டு வாரங்களில் கோழி இறைச்சியின் விலை குறையும் என எதிர்பார்ப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.